தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.?!
Government transport workers protest
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்து, 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரே ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 81 மாதங்களாக ஓய்வு ஊதியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும். தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு இதற்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி, அனைத்து மண்டலப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களிலும் ஏஐடியுசி சார்பில் வரும் ஆக. 3-ம் தேதியோ அல்லது அதற்குப் பின்னரோ ஆர்ப்பாட்டம் நடைபெறும்". என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
English Summary
Government transport workers protest