வெளிநாட்டு மதங்களால் தான் பிரச்னை.!! நமது அடையாளத்தை அழிக்க நினைத்தார்கள்..!! - ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு..!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் "உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன். அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்பை ஏற்படுத்தியது.

அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர். அடிப்படை உண்மை என்பது ஒரு பரமேஸ்வரன், அவன் படைத்தது மனிதன், விலங்குகள், செடி கொடி என அனைத்தும் ஒரு குடும்பமே. இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்கள் உடை, தோற்றம் என வெவ்வேறாக உள்ளன. ஆனால் அனைத்தையும் தாண்டி உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்.

சனாதன தர்மத்தை ஏற்றாலும், எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் எதிரொலி.

பாரதத்தின் 200 ஆண்டுகளுக்கு முன் கார் இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது பாரதம் உள்ளான போது தோன்றியவர் தான் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மம் நிறைந்தது.

புதியதாக வெளிநாட்டில் இருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது. இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. வெளியில் இருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்னை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். ஆன்மீகத்தில் உயர்ந்த நாடு பாரதநாடு" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor ravi said Bishop Pope Caldwell wanted to destroy our identity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->