திடீர்‌ திருப்பம்.. ஆளுநரின் முடிவால் திமுகவுக்கு 2 சிக்கல்..!! - Seithipunal
Seithipunal


பொன்முடியின் பதவி ஏற்கும் விழா எப்போது? 

இரண்டு நாள்‌ பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். வழக்கமான பணிகளுக்காகவே ஆளுநர் ரவி இன்று டெல்லி புறப்படு சென்றதாக தெரிய வருகிறது. 

 இன்று டெல்லி செல்லும் ஆளுநர் நாளை மறுநாள் டெல்லியிலிருந்து ஏர்விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்பு வழங்கப்பட்டதோடு அவரை அமைச்சராக பதவியேற்பு செய்து வைக்கும்படி தமிழக ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று‌ கடிதம் எழுதி இருந்தார். ஆனால் தற்போது அந்த விழா தள்ளிப்போகிறது.

 பொன்முடி பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆளுநர் இன்று டெல்லி‌ புறப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் பொன்முடிக்கு சாதமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு‌ குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடிக்கு புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோன்று தமிழகத்தில் தொடர்ந்து போதை பருள் புழக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் அதனை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறியதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆனா எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து மனு அளித்திருந்தார்.

அது குறித்து செய்தி குறிப்பு வெளியிட்ட இருந்து ஆளுநர் மாளிகை தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் பெற்றோர்கள் தன்னிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இது குறித்தும் தமிழக ஆளுநர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Ravi visit Delhi regards drugs and ponmudi issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->