ஆளுநரின் சித்தன்னவாசல் பயணம் திடீர் ரத்து! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை, சித்தன்னவாசலுக்கு இன்று பிற்பகல் 2.45 மணி அளவில் ஆளுநர் ஆர்.என். ரவி பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காரைக்குடியில் இருந்து புறப்படும் நேரம் தாமதமாகிவிட்டதாகவும் மீண்டும் மாலை திருச்சி விமான நிலையம் செல்வதற்கு தாமதமாகிவிடும் என்பதாலும் ஆளுநரின் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக ஆளுநரின் வருகையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Siddhannavasal trip cancelled


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->