அழுகிப்போன முட்டை! தமிழக அரசுக்கு அறிவுரை கூறிய ஆளுநர் தமிழிசை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க பாருங்கள் என்று, ஆளும் திமுக அரசுக்கு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவிக்கையில், "நீட் தேர்விலும் சரி, புதிய கல்விக் கொள்கையிலும் சரி மாணவர்கள் சிறப்பாக செயலாற்றத் தயாராகிவிட்டனர்.

நாட்டின் எந்த மாநிலங்களைவிடவும் தமிழகத்தில் தான் கல்வியில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. இதை மாற்றியாக வேண்டும்.

ஆட்சிக்கு வந்ததும் 'முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து' என்றார்கள். ஆனால் இப்போது என்ன செய்கிறார்கள்? பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு நீட்டை பற்றித் தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் லட்சக்கணக்கில் கையெழுத்து வாங்கினாலும் பிரச்சனை இல்லை. 

தம்பி உதயநிதி முட்டையை தூக்கி காண்பித்தார். முதலில் அவர், ஈரோட்டில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக 1,200 அழுகிய முட்டைகள் வைத்துள்ளதை பார்க்க வேண்டும்.

தென் தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை மன வருத்தமாக உள்ளது. இதுவே வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். 

கோயில் தேரோட்டத்துக்கு துணை ராணுவத்தை வைத்து நாங்கள் நடத்தவா? என்று நீதிமன்றம் கேட்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடந்தாலும், அதை கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்கப் பாருங்கள்" என்று ஆளும் திமுக அரசுக்கு தமிழிசை அறிவுரை வழங்கியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Tamilisai Advice to TNGovt And Udhay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->