விஜயின் அரசியல் என்ட்ரி! அமித்ஷாவை சந்தித்த ஆளுநர் சொன்ன செய்தி! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுக்க இப்போது நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சி குறித்துதான் ஒரே பேச்சா இருக்கு.

தேவமாதா பரிசுத்தரான திருநாளில், சுபமுகூர்த்த வெள்ளிக்கிழமையில் தனது அரசியல் கட்சியின் பெயரை நடிகர் விஜய் அறிவித்து இருந்தார்.

மேலும், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை, 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ள நடிகர் விஜய்க்கு, பல அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனிடம் நடிகர் விஜயின் அரசியல் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஆளுநர் தமிழிசை, "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை, நான் முழு மனதுடன் வரவேற்று அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

நம் நாடு ஜனநாயக நாடு. இங்கு இவர் தான் அரசியலுக்கு வரவேண்டும், இவர் வரக்கூடாது என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

நடிகர் விஜய்யை போல பல புதியவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் அரசியலில் ஆரோக்கியமான போட்டி இருக்கும்" என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

இதற்கிடையே, தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள். அன்புடன், விஜய்" என்று நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor Tamilisai Wish Thalapathy Vijay TVK party


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->