TNPSC தலைவர் ஆவாரா சைலேந்திரபாபு.? முட்டுக்கட்டை போடும் ஆளுநர்.!! கொந்தளிக்கும் தமிழக அரசு.!!
GovernorRavi has put on hold Syilendrababu nomination TNPSC Chairman post
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சியின் தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவின் பெயர் மற்றும் 10 உறுப்பினர்கள் பெயரை பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
தமிழக அரசு அனுப்பி இருந்த பரிந்துரையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருந்தார். ஆளுநர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் பரிந்துரையை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளது. ஆளுநர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநர் தமிழக அரசின் பரிந்துரையை நிறுத்தி வைத்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இருப்பினும் கூடிய விரைவில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
GovernorRavi has put on hold Syilendrababu nomination TNPSC Chairman post