டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன ஆவணங்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்.!! காரணம் என்ன..? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற நிலையில் அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்து அதற்கான கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. 

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு மற்றும் 10 உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அனுப்பப்பட்ட கோப்புகள் தற்பொழுது மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

இதற்கு காரணம் "எதன் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் பின்பற்றப்படவில்லை. முறையாக விளம்பரம் செய்து அதன் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் உட்பட உறுப்பினர்கள் நியமனத்தை மேற்கொள்ளவில்லை.

தற்போது சைலேந்திரபாபுவுக்கு 61 வயது பூர்த்தியாகி உள்ள நிலையில் 62 வயதில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் வகிப்பவர் ஓய்வு பெறுவது கட்டாயம் என்பதால் அது குறித்தான வழிகாட்டுதல்களை தமிழக அரசு பின்பற்றவில்லை" இது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் மிக முக்கியமான டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான ஆவணத்தை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இத்தகைய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்து மீண்டும் இதே நியமனத்தை ஆளுநருக்கு அனுப்புமா அல்லது வேறு யாரேனும் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு பரிந்துரை செய்யுமா என்பது கூடிய விரைவில் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GovernorRavi sent back TNPSC chairman nomination documents


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->