இடியும் நிலையில் உள்ள முதலமைச்சர் திறந்து வைத்த கட்டிடம் - அதிருப்தியில் மக்கள்.!
govt building damage in coimbatore
கோயம்புத்தூர் மாநகராட்சி 52 வது வார்டு பீளமேடு கல்லூரி நகர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணொலி காட்சி மூலம் நகர்ப்புற நல வாழ்வு மையம் புதிதாக திறக்கப்பட்டது.
இந்த மையம் ஒரு நாளில் காலை மாலை என்று இரு முறை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட இந்த மையத்தின் முன்புற தூணில் பெரியளவு விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது.
இதற்கு முன்பே அந்த தூணில் விரிசல் ஏற்பட்டு தற்காலிகமாக பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தத் தூண், மீண்டும் இடியும் நிலையில் உள்ள அதனை தரமான முறையில் கட்டி தர வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதலமைச்சர் திறக்கப்பட்ட அரசு கட்டிடம் ஒரு மாதத்திற்குள் இடியும் நிலையில் இருப்பதால் பொது கடும் அதிருதியில் உள்ளனர்.
English Summary
govt building damage in coimbatore