நாகர்கோவில் || பேருந்தில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - கையும் களவுமாக சிக்கிய நடத்துனர்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தில் தினமும் ஏராளமான மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று அந்த பேருந்தின் நடத்துநர், அதில் பயணம் செய்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் தனக்கு நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதைகேட்ட பெற்றோர், ஊர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் அந்த பேருந்து ஞானையாபுரம் வந்த போது சிறைபிடித்தனர். இதைத் தொடர்ந்து நடத்துனரை பிடித்து அடிக்கத் தொடங்கினர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் நடத்துநரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீசாா் நடத்திய விசாரணையில் அரசு நடத்துநர் உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்த சசி என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அவர்மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்தில் பள்ளி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus conductor arrested for harassment case in nagarkovil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->