ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி.. பதறிப்போன பயணிகள்.. நடத்துனர் உயிரிழந்த சோகம்.!!
Govt bus conductor died due to heart attack
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து கரூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கடலூருக்குள் நுழைந்தவுடன் பேருந்தில் இருந்த நடத்துனர் பன்னீருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் பதறிப் போன பயணிகள் பேருந்து ஓட்டினர் கோபாலுக்கு தகவல் கொடுக்க அவர் அரசு பேருந்து உடனடியாக பயணிகளுடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார்.
அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அரசு பேருந்து நடத்தினர் பன்னீர் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு பேருந்து நடத்த பன்னீருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சக பயணிகளின் ஒத்துழைப்புடன் அரசு மருத்துவமனைக்கு துரிதமாக சென்ற போதும் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Govt bus conductor died due to heart attack