எப்படியாவது தேனிக்கு மாத்துங்க.!! அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் கதறிய ஓட்டுநர்.!! காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தேனி மாவட்டத்திற்கு பணி மாறுதலுக்காக தனது 6 மாத குழந்தையை அமைச்சரின் காலில் போட்டு கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம் சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது அரசு போக்குவரத்து ஓட்டுன கண்ணன் என்பவர் தனது இரு குழந்தைகள் மற்றும் தாயுடன் வந்திருந்தார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 9 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வேலை செய்து வருவதாகவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தனது மனைவி டெங்கு காய்ச்சலால் இருந்து விட்டதால் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் இரண்டு முறை பணி ஆறுதலுக்காக கோரிக்கை வைத்து நிறைவேற்றவில்லை எனவும் தெரிய வருகிறது.

இதற்கு கோவை மாவட்டத்தில் ஓட்டுநர் பற்றாக்குறை நிலவி வருவதால் குடும்பத்தினருடன் கோவைக்கு வருமாறு மேலாளர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்ட நிகழ்ச்சி போது ஆறு மாத குழந்தையை காலில் போட்டு ஓட்டுனர் கண்ணன் கோரிக்கை மனு வைத்துள்ளார். கோரிக்கையை ஏற்று பணி மாறுதல் வழங்க அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளதாக ஓட்டுனர் கண்ணன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt bus driver fell at Minister feet with 6month old baby for transfer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->