கொடைக்கானல் || பேருந்து நிலையத்தில் சராமாரிக் தாக்குதல் - அரசு பேருந்து ஓட்டுனர்களின் வெறிச்செயல்.!  - Seithipunal
Seithipunal


பேருந்து நிலையத்தில் சராமாரிக் தாக்குதல் - அரசு பேருந்து ஓட்டுனர்களின் வெறிச்செயல்.! 

திண்டுக்கல் மாவாட்டம் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு அரசு ஏசி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சாதாரண அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஏசி பேருந்து ஓட்டுநர் அந்த பேருந்தை தாமதமாக இயக்கி வந்துள்ளார். இதன் காரணமாக சாதாரண அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பானது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநர்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் செருப்புகளால் தாக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தகாத வார்த்தைகளை பேசியும், தாக்கியும் கொண்டுள்ளனர். 

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் முகம் சுளிக்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus drivers attack kodaikanal bus stand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->