நடுரோட்டில் கொழுந்து விட்டு எரிந்த அரசு பேருந்து - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


சேலம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று மதியம் புறப்பட்டது. 67 பயணிகளுடன் சென்ற இந்தப் பேருந்து மாலை நான்கு மணியளவில், கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம் அருகே சென்ற போது, எஞ்சினின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்தது.

இதைப்பார்த்து சந்தேகமடைந்த ஓட்டுநர் சிவகுமார் மற்றும் நடத்துநர் ராஜா உள்ளிட்டோர் சந்தேகமடைந்து பேருந்தை நெடுஞ்சாலை மேம்பாலத்தின் ஓரத்திலேயே நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அப்போது, பேருந்தில் தீப்பிடித்திருப்பது தெரியவந்ததால், உடனடியாக பயணிகள் அனைவரையும் இறங்குமாறு எச்சரித்துள்ளனர். உடனே பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்கி தலை தெறிக்க ஓடினர்.

இதற்கிடையே பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து கரிக்கட்டையாக மாறியது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus fire accident in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->