அடுத்த நெருக்கடி.!! "கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?" கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில் சில மாவட்டங்களில் பேருந்து சேவை முடங்கியுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழக அரசு தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு போக்குவரத்து சங்க தொழிலாளர்களின்  வேலை நிறுத்தத்திற்கு மின் வாரிய தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனை  உறுதிப்படுத்தும் தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சென்னை அண்ணா சாலையில் நாளை மாலை 5 மணிக்கு மின்வாரிய தொழிலாளர்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எங்கள் போராட்டத்தில் பங்கேற்றத்துடன், ஆட்சிக்கு வந்தால், ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. இந்தாண்டாவது பொங்கல் பரிசாக எங்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, அரசாணை 354ன்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt doctors request tngovt to give pay hike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->