தருமபுரி : திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு ஊழியர் கைது.!! - Seithipunal
Seithipunal


தருமபுரி : திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு ஊழியர் கைது.!!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் அருகே அண்ணா நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவுகளுக்காக காத்திருந்தார். இந்த நிலையைக், இந்தப் பெண்ணுக்கு அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதைத் தொடர்ந்து இருவரும் பல இடங்களில் காதலர்களாக சுற்றி வந்துள்ளனர். இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய பிரபாகரன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதில் அந்த பெண் கர்ப்பமடைந்ததனால், அவர்கள் இருவரும் சம்பவம் குறித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தையும் கலைத்துள்ளனர். இதற்கிடையே பிரபாகரனுக்கு அரசு வேலை கிடைத்தது. 

இதனால் அவர் அந்த பெண்ணிடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதையறிந்த அந்த பெண் பிரபாகரனை பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் அவர் செல்போனை எடுக்காமல் இருந்துள்ளார். 

இதையடுத்து அந்த பெண் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt employee arrested for sexuall harassment case in dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->