அரசு மருத்துவமனையில் மின்சார தடை காரணமாக பறிபோன உயிர்: கொந்தளிக்கும் உறவினர்கள்! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை, சிவனாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அமராவதி (வயது 48). இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். 

இவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டதால் அமராவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிலிருந்து விட்டார். 

அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு மின்சார தடை ஏற்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயல் இழந்து விட்டதால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். 

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் பெண் உயிரிழப்பு தொடர்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்  இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt hospital woman dead case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->