வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய அரசாணை வெளியீடு.!!
govt order five percentage shop reservation to disabled person in commercial complex
வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய அரசாணை வெளியீடு.!!
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000மாக உயர்த்தி வழங்கவும், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கவும், அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையையும் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டையாக மாற்றித் தரவேண்டும் என்று பல கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% கடை ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "2023-24 -ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவிகிதம் கடை ஒதுக்கீடு ஆணை - வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 17.04.2023 அன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது ஏனைய அறிவிப்புகளுடன் முதலமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்:
"உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஐந்து சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும்”. இந்த அறிவிப்பின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்படும் " என்று அறிவிக்கப்பட்டது.
English Summary
govt order five percentage shop reservation to disabled person in commercial complex