மருத்துவப்படிப்பில் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.!
govt school student medical course counsiling today start
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியில் 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, தரவரிசை பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையதளம் மூலம் நேற்று தொடங்கியது.
இந்த நிலையில், மருத்துவப்படிப்பு சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.
முதல் முறையாக, சிறப்பு பிரிவு கலந்தாய்வு காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணி வரையில் நடைபெறுகிறது. அதன்பிறகு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இந்தக் கலந்தாய்வில், தரவரிசை பட்டியலில் முதல் 1,007 இடங்களை பிடித்த மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
English Summary
govt school student medical course counsiling today start