#பதற்றம் : ஆரணி- வேலூர் சாலையில் காலாண்டு தேர்வை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்.! குவிக்கப்பட்ட போலிசார்.!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் காலாண்டு தேர்வை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 20 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் படித்து வந்த பிரபாகர் என்ற மாணவர் ஆசிரியர் தாக்கி விட்டதாக அளித்த புகாரின் பேரில் நான்கு நாட்களுக்கு முன் இரண்டு ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தனர். இதில் இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். 

நான்கு ஆசிரியர்களுக்கும் ஆதரவளிக்கும் விதமாக அப்பள்ளி மாணவர்கள் காலாண்டு தேர்வு எழுதுவதை புறக்கணித்து ஆரணி- வேலூர் சாலையில் 400-கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கூட சமரசம் ஏற்படவில்லை. 

இதில், பாதிக்கப்பட்ட மாணவர் பிரபாகரனின் பெற்றோர் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் எதிர்த்தரப்பில் போராட்டம் செய்து குற்றவாளிகளான நான்கு ஆசிரியர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டம் செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனை தொடர்ந்து அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt Scool students protest on Arani Vellore road 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->