மக்களே.. பேருந்து கட்டண உயர்வால் கவலையா.? அரசு அறிவித்துள்ள ஆஃபர்.. மிஸ் பன்னிடாதீங்க.!  - Seithipunal
Seithipunal


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் நபர்களுக்கு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வரும் திங்கட்கிழமை சுதந்திர தினம் கொண்டாட இருப்பதால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் உள்ளிட்ட மூன்று நாட்களும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வேலை செய்யும் வெளியூர் நபர்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்து நிலையங்களில் கூட்டம் கூட ஆரம்பித்துள்ளது 

இதன் காரணமாக தனியார் ஆம்னி பஸ்களின் கட்டணம் 3 மடங்கு அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆம்னி நிறுவனங்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. ஆயிரம் ரூபாய் டிக்கெட்டுகள் 3000 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது.

இது சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய நிலையில் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பதற்காக தயாராகியுள்ளனர். எனவே, அவர்களுக்கு ஏற்ற வகையில் 610 சிறப்பு பேருந்துகளை அரசு தற்போது வழக்கத்திற்கு மாறாக வழங்கியுள்ளது.

இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 425 பேருந்துகளும், நாளை 185 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt Transport Department new announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->