#மொடக்குறிச்சி:: மக்களை பாதிக்கும் தொழிற்சாலையை மூட வேண்டும்.. கிராம சபையில் முடிவு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பா பேட்டை ஊராட்சி வாவிக்காடு வலசு கிராமத்தில் எஸ்.பி.எம் வீலின் மில் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் பஞ்சு துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, தோல் நோய் போன்ற பிரச்சனைகளால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிறுவனத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கஸ்பாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

பொதுமக்களின் மனுவை ஏற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் நிலத்தடி நீரை மாசடையச் செய்யும் எஸ்.பி.எம் வீலிங் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானத்தை நிறைவேற்றினர். கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும் என ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grama Sabha decides factory affecting people should be closed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->