பக்ரீத் பண்டிகை: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச்செய்தியில்,

"சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்.

ஏழை எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள், பிறகு நண்பர்கள் அடுத்துதான் தங்களுக்கு என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பக்ரீத் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டா பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Greetings from CM Stalin on the occasion of Bakrit


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->