பாலியல் புகார்களை பெற கல்லூரிகளில் ‘புகார் குழு’ - மாநில மகளிர் ஆணையம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக மாநில மகளிர் ஆணையத்தில் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, 2 பேராசிரியர்கள் உள்பட 4 பேர் மீது காவல் நிலையயத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இதுபோன்ற பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை பெறுவதற்கு ஏதுவாக ‘உள்ளக புகார் குழு’ ஒன்றை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.  இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, மாநில மகளிர் ஆணையம் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அமைக்கப்பட உள்ள புகார் குழுவில், பெண் பேராசிரியர் ஒருவரும், மாணவிகள் தரப்பில் ஒருவரும்,  தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவரும் இடம் பெறவேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம் வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மாநில மகளிர் ஆணையம், கல்வி நிறுவனங்களில் மாணவிகளை நேரில் சந்தித்து பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி, இதன் விளைவாக தற்போது மாணவிகள் தைரியமாக புகார்களை தெரிவிக்க முன்வருகின்றனர் என்றும், தங்களிடம் வரும் புகார்கள் மீது காவல்துறை உதவியுடன் நாங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grievance Committee in colleges to receive sexual complaints State Womens Commission orders


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->