மணமேடைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை.. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


திருமணத்தன்று மாப்பிள்ளை சடலமாக அமைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவருக்கு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண சடங்குகள் செய்வதற்காக வீட்டில் இருந்தவரை தேடிய போது அவரை காணவில்லை என கூறப்படுகிறது.

அப்போது, காவல் நிலையத்திலிருந்து ஜெகதீசன் தந்தை அழைத்த காவலர்கள் உங்கள் மகன் ஓலை பாலம் சந்திப்பில் சாலை விபத்தில் பலியாகி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர் தலையில் வெட்டு காயங்களுடன் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது தலையில் வெட்டு காயம் இருந்த நிலையில் அவர் விபத்தில் கூறப்படுவதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் எப்படி அந்த இடத்திற்கு எப்படி சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் , அதற்கு காவல்துறையினர் மறுக்கவை ஆத்திரமடைந்த அவர்கள் மகனுக்கு நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட கண்காணிப்பு நகர் பாலாஜி அதிகாலையில் நடந்த விபத்தால் முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு விழுந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஊரில் இருந்து விபத்து ஏற்பட்டுள்ள இடம் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

groom Death in Accident 4


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->