தமிழகத்தில் 33 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் நீர்வள துறையின் கீழ் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. தமிழக முழுவதும் கிணறுகள் அமைக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் கண்காணிக்கப்பட்டு மாதந்தோறும் நிலத்தடி நீர் விவரம் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வருகிறது. தமிழக முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்தது. அதேபோன்று வடகிழக்கு பருவ மழையும் பரவலாக பெய்ததால் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.85 மீட்டர், தேனி மாவட்டத்தில் 2.9 மீட்டர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.4 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோன்று அக்டோபர் மாதத்தை விட நவம்பரில் வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Groundwater level increased in 33 districts of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->