ரூ.1.50 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்! கடந்த ஆண்டை மிஞ்சிய சாதனை! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ. 1.50 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 2017 ஜூலை மாதம் நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது. அந்த மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் வருவாய் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் 1.55 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஜிஎஸ்டி வருவாய் கிடைத்த நிலையில் பிப்ரவரி மாதம் ரூ. 1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அந்த அறிக்கையின் படி,

* 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி கிடைத்துள்ளது.
* இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, 
* மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, 
* ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), 
* செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வரி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டு பிப்ரவரி மாதம் ரூ. 1,33,026 கோடி வசூல் ஆகிய நிலையில், அதனைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 12% வசூல் கிடைத்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GST 2022 2023 feb


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->