#தமிழகம் || இட்லி, தோசை, பொங்கல் விலை உயர வாய்ப்பு?!  - Seithipunal
Seithipunal


ஜிஎஸ்டி வரியில் இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்த அரிசி, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வரிவிதிப்பிற்கு அரிசி ஆலை மற்றும் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும், அரிசி மீதான ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது. 

இதன்காரணமாக உணவகங்களில் உணவு பண்டங்களின் விலை மேலும் உயர வாய்ப்பு அமைந்துள்ளது. குறிப்பாக இட்லி, தோசை, பொங்கல், ஆனியன் ஊத்தப்பம் போன்ற உணவுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

இந்த விலை உயர்வு சம்மந்தமாக சென்னை மாவட்ட உணவக சங்க தலைவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 

"ஏற்கனவே இட்லி, தோசை, பொங்கல். டீ, காபி, வடை, பூரி, சப்பாத்தி மற்றும் அசைவ உணவுகள் அனைத்திற்கும் 5 % வரி விதிக்கப்படுகிறது.

அப்படி இருக்க அரிசிக்கு மட்டும் தனியாக வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கு 5 % ஜிஎஸ்டி விதித்தால் உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். 

எந்த வரி விதித்தாலும், உயர்த்தினால் அது பொதுமக்களின் தலையில்தான் விழுகிறது. கியாஸ், பால், மளிகை பொருட்கள், சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிப்பால் எண்கள் தொழிலே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருப்பது, மேலும் நசுக்குவதாக உள்ளது. 

இதனை காரணமாக இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைளின் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கும். இந்த விலை உயர்வால் பொதுமக்கள் ஓட்டல் சாப்பாடை பார்த்தாலே பயம் கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gst issue tn hotel price may be hike


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->