பரபரப்பு - சென்னையில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு.!
gun shoot to popular rowdy in chennai
சென்னையில் பிரபல ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி அறிவழகன். ஏ பிரிவு ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியான அறிவழகன் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பின்னர் போலீசார் அவரை தேடும் பணியை தீவிரபடுத்தினர். இந்த நிலையில் ஓட்டேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனந்தோப்பு பகுதியில் அறிவழகன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி காவல் ஆய்வாளர் பிரேம் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு அவரைக் கைது செய்ய சென்றனர். போலீசாரைக் கண்டதும் பிரேம் குமார் தன்னிடம் இருந்த ஆயுதங்களால் அவர்களை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார்.
உடனே உதவி ஆய்வாளர் பிரேம் குமார் ரவுடி அறிவழகனை காலில் சுட்டுப் பிடித்தார். தற்போது அறிவழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
gun shoot to popular rowdy in chennai