ஜல்லிக்கட்டு தடை நீக்கம்.. தமிழர் ஒற்றுமை வென்றது.. ஜிவி பிரகாஷ் குமார் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.

பின்னர் அதிமுக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் இயற்றவே, அதற்க்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதித்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து பீட்டா, கூபா உள்ளிட்ட வெளிநாட்டு விலங்கின அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


இந்த வழக்கில் "தமிழகத்தின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்தது ஜல்லிக்கட்டு" என்பதை ஏற்று, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்  தனது டிவிட்டர் பக்கத்தில், "6 ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களின் அகிம்சை வழி வீர தீர சூரத்தை சாட்சியாய் கண்டேன் , போராட்டத்தில் நானும் ஒரு துளியாய் நின்றேன். அரசின் ஆணையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன். தமிழர் ஒற்றுமை வென்றது" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GV Prakash Kumar tweet about jallikattu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->