#BREAKING | வசமாக சிக்கிய ஹெச். ராஜா! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
H Raja Case Chennai HC Order 29082023
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
தன் மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய கோரி ஹெச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது, கனிமொழி குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட 11 வழக்குகள் ஹெச். ராஜா மீது பதியப்பட்டிருந்தது.
குறிப்பாக 11 வழக்குகளில் அறநிலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை அவதூறாக பேசிய வழக்கும் அடங்கும்.
இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசியல் பழிவாங்கும் உள்நோக்கத்துக்காக பதியப்பட்டுள்ள இந்த 11 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஹெச். ராஜா தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்து ஹெச். ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவதாக தீப்பளித்தது.
English Summary
H Raja Case Chennai HC Order 29082023