சார் யார்? விவகாரம் - எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த கோவி. செழியன்.!
higher education minister kovi sezhiyan answer about eps who sir issue
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் 'சார்... சார்...' என்று ஒருவரிடம் பேசியிருப்பதாகவும், அந்த சார் யார்? என்பது குறித்து உயர் அதிகாரி தெரிவிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், 'யார் அந்த சார்?' என்ற விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்த்தல பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- "முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார். இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
higher education minister kovi sezhiyan answer about eps who sir issue