14 ஆயிரம் மாணவர்களை முடியாமல் தவிக்கும் தலைமையாசிரியர்கள்.! நடந்தது என்ன?
headmasters search fourteen thousand student not come in schools
14 ஆயிரம் மாணவர்களை முடியாமல் தவிக்கும் தலைமையாசிரியர்கள்.! நடந்தது என்ன?
சென்னையில் கல்வித்துறை சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதி அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாவட்டத்தில் அனைத்து அரசு, உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் 'கூகுள் மீட்'டில் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடைபெற்றது.
அப்போது, மாவட்டத்தில் 2 - 12ம் வகுப்பு வரை 15 நாட்களுக்கு மேல் 14 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் அவர்கள் இடைநிற்றல் மாணவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களை விரைவில் தேடி கண்டுபிடித்து தலைமையாசிரியர்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
பள்ளியில் வழங்கப்படும் இலவச திட்டங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழை பள்ளியில் வழங்கக்கூடாது.
சேவை மையம் மூலம் வழங்க தேவையான 'ஆன்லைன்' அனுமதியை தலைமையாசிரியர் நிலுவையில்லாமல் வழங்கியிருக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது: "மாணவர்களை தேடி கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. மாணவர்கள் முகவரியில் தேடி சென்றால் அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பல குடும்பங்களில் மாணவர் மூலம் வரும் வருவாய் முக்கிய தேவையாக உள்ளதால் பெற்றோரே அனுப்ப மறுக்கின்றனர். சில குடும்பங்கள் பிழைப்புக்காக வெளியூறுக்கு குடியேறிவிட்டன.
இப்படியுள்ள நிலையில், அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது தெரியவில்லை. பள்ளியில் சேர்ப்பது குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
headmasters search fourteen thousand student not come in schools