தி.மலையில் 4ம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்த தலைமை ஆசிரியை தலை மறைவு..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்த மங்களம் பஞ்சாயத்துக்குட்பட்ட மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியை உஷாராணி இரண்டு நாட்களுக்கு முன்பு சரியாக படிக்கவில்லை எனக்கூறி 4ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு தீக்குச்சியால் கன்னத்தில் சூடு வைத்துள்ளார். இதில் காயம் அடைந்த மாணவி அழுது கொண்டு வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேட்க சென்ற பெற்றோரிடம் தலைமை ஆசிரியை முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியை உஷாராணி பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியை நேற்று காலை வீடு திரும்பியுள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமாக மணிமங்கலம் போலீசார் தலைமை ஆசிரியை உஷாராணியை கைது செய்ய அவர் வீட்டுக்கு சென்ற பொழுது வீடு பூட்டப்பட்டிருந்தது. மாணவிக்கு சூடு வைத்த வழக்கில் தலைமையாசிரியை தற்பொழுது தலைமறைவாகியுள்ளார். இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பள்ளிக்குச் சென்று மாணவ மாணவிகளிடம் தனியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் மணிமங்கலம் பகுதியில் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Headmistress set fire to 4th class girl cheek in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->