பழனி : டாட்டூ கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.!
health department raide tatoo shop in pazhani
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் பழனி அடிவாரத்தில் உள்ள கடை வீதிகளில் விற்பனை செய்யப்படும் சில முக்கிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
அந்த வகையில், பழனி கடைவீதிகளில் எந்திரங்கள் மூலம் டாட்டூ என்னும் நவநாகரீக பச்சை குத்தும் தொழிலிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு எழுத்துக்கு ரூ.50 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்த கட்டணம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் டாட்டூ வரைந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், கடைகளில் டாட்டூ வரைவதற்கு பயன்படுத்தப்படும் எந்திரத்தில் பொருத்தப்படும் ஊசிகள் மாற்றப்படுவதில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த படி உள்ளது.
இவ்வாறு ஒரே ஊசியை பயன்படுத்தும் போது எய்ட்ஸ் மற்றும் ரத்த பரிமாற்றத்தால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இந்த புகாரின் படி, அதிகாரிகள் பழனி அடிவாரப்பகுதியில் டாட்டூ வரையும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "ஒருவருக்கு பயன்படுத்தும் ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்த கூடாது. பயன்படுத்திய ஊசியை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் பதப்படுத்தி வாரம் ஒருமுறை நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதையும் மீறி ஒரே ஊசியை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
health department raide tatoo shop in pazhani