மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மூன்றாவது அலையை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளின் எதிரொலியாக கட்டுக்குள் வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். 

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் முககவசம் கட்டாயம் என்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது .

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அலுவலகத்தில் தெர்மல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health dept new order to districts collectors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->