மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு.! மீறினால் அபராதம்., தீவிரமாகியது கண்காணிப்பு குழு.!  - Seithipunal
Seithipunal


கடற்கரை என்பது மனிதனின் உணர்வுபூர்வமான இடமாக பார்க்கப்படுகிறது. மனதில் அமைதி இல்லாதவர்கள் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை பார்த்தவாறு நின்றிருந்தால் மனம் லேசாகி விடுவதாக பலரும் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட கடற்கரை சமீப காலமாக அசுத்தங்கள் மிகுந்து காணப்படுகின்றன. 

பலரும் கடைகளில் விற்கப்படுகின்ற பிளாஸ்டிக் பைகளில் அடைத்த நொறுக்கு தீனிகளை கொண்டு வந்து கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, அப்படியே தூக்கி வீசுகின்றனர். அதிலும் குறிப்பாக மெரினா கடற்கரையில் துர்நாற்றம் வீசி அமைதியை தேடி செல்பவர்களுக்கு மேலும் அசூயையை தான் கொடுக்கிறது. 

இத்தகைய நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மண்டல அலுவலர் தலைமையிலான இந்த குழுவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளிட்ட 16 பேர் இக்குழுவில் இடம் பெற்று இருக்கின்றனர். 

இதற்காக மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை இந்த குழு செயல்பட்டு பிளாஸ்டிக் குப்பைகளை போடுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்கின்ற பணியில் ஈடுபட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health team Supervising For marina Beach cleaning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->