ஆளுநருக்கு அடுத்தடுத்து செக் - உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுக்கள் விசாரணை.!
hearing of tn govt additional petition in supreme court
சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் திருத்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.
அரசியல் சாசனப்படி மசோதாக்களுக்கும், அரசின் கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்தும், புறக்கணித்தும், நடவடிக்கை எடுக்காமலும் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆகவே, ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தன்னிச்சையானது, தவறானது, நியாயமற்றது என்று அறிவிக்க வேண்டும்.
ஆளுநரின் செயல் அரசியல் சாசனப் பிரிவுகள் 14, 19, 21-க்கு எதிரானது மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கை, சமத்துவம், சுதந்திரம், கண்ணியம் ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெறவுள்ளது.
English Summary
hearing of tn govt additional petition in supreme court