அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்..தமிழகத்தில் ஆஞ்சியோ பரிசோதனை மையம் அமைக்கப்படுமா ? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள அரசுமருத்துவமனைகளில் ஆஞ்சியோ பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

தமிழகத்தில் அதிகரித்துவரும் மாரடைப்பு மரணங்களை தடுக்க தாலுகாதோறும் அரசுமருத்துவமனைகளில் ஆஞ்சியோ பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என மருத்துவ துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

வாழ்க்கைச் சூழலில்,உணவுமுறை மாற்றத்தால் பலரும் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.மாரடைப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோருக்கு உயிர் காக்கும் முதல் உதவிசிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.பின், மேல்சிகிச்சை பெறமருத்துவ கல்லுாரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனை,
தனியார் மருத்துவமனைகளுக்குஅனுப்பப்படுகின்றனர்.மேல்சிகிச்சை பெறும் முன்,ஆஞ்சியோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு தனியார் மருத்துவமனைகளையே நாடவேண்டியுள்ளது.

மேலும், பல ஆயிரம் ரூபாய்செலவாகிறது. ஏழை, நடுத்தரமக்கள் சிரமப்படுகின்றனர்.இதில் முதல்வர் காப்பீடு திட்டப்பயனை பெறுவதிலும் சிக்கல்உள்ளது. இதைத் தவிர்க்கஒவ்வொரு தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் ஆஞ்சியோ பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் என அரசு டாக்டர்கள்
கூறுகின்றனர்.பட்ஜெட்டில் இதற்கானஅறிவிப்பு வெளியிட்டால் ஏழை,நடுத்தர மக்கள் பயனடைவர்என சமுக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர், பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heart attack deaths on the rise Will an angio testing centre be set up in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->