டெல்டா மாவட்டம் : விளைநிலங்களை சூறையாடிய கனமழை.! மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 29 ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்கிறது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வினால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதனால், விவசாயிகள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். ஒரே நாளில் சீர்காழியில் மட்டும் அதிகபட்சமாக 43 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

எங்களது வாழ்நாளில் இதுவரை இப்படியொரு மழையை நாங்கள் பார்த்ததில்லை என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கனமழையால், சுமார் 30,000 ஏக்கருக்கு மேலாக சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுமட்டுமல்லாமல், விளைநிலங்களில் இடுப்பளவுக்கு மேல் மழைநீர் தேங்கியுள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது, "நாங்கள் அனைவரும் கடன் வாங்கி தான் பயிர் சாகுபடி செய்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு முப்பது ஆயிரம் செலவு செய்து பயிரிட்டுள்ளோம். ஆனால், மிக கனமழை பெய்ததனால், வயல் நிலங்களில் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது.

இந்த மழை நீர் வடிவதற்கு சுமார் பதினைந்து நாட்கள் வரை ஆகும் என்றுத் தெரிகிறது. இதனால், நாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகியுள்ளது. இதற்காக அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain delta district farmers worry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->