இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழை: தீப்பிடித்து எரிந்த மின்கம்பம்! அச்சத்தில் மக்கள்!
heavy rain Dindigul electricity pole caught fire
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து அளவு பெய்து வந்த நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் தொடங்கிய மழை பின்னர் கனமழையாக அதிகரித்து பெய்தது. சில மணி நேரம் பெய்த தொடர் மழையினால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
காலையில் பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதியுடன் பள்ளிகளுக்கு சென்றனர். திண்டுக்கல் மாநகராட்சி 31வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் திடீரென மின் கம்பத்தில் தீப்பொறி ஏற்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் மின்கம்பத்தில் தீ பற்றிய எரிய தொடங்கியது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ வேகமாக மின் கம்பிகளுக்கு பரவி எரிய தொடங்கியது.
இதனால் அருகில் இருந்த 6 வீடுகளில் மின் கம்பிகள் முற்றிலுமாக எரிந்து சேதமாகின. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
heavy rain Dindigul electricity pole caught fire