சென்னையில் கனமழை.. முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி.!
Heavy rain in Chennai Sembarambakkam Lake has reached full capacity
சென்னையில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டிமயுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் கிருஷ்ணா ஆறு நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், 23. 36 அடியை எட்டி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. எரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,700 கனஅடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
English Summary
Heavy rain in Chennai Sembarambakkam Lake has reached full capacity