மீண்டும் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. நாளை10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
Heavy rain is coming again Orange alert for 10 districts tomorrow
தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (டிசம்பர் 10) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். .
நாளை (டிசம்பர் 11) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain is coming again Orange alert for 10 districts tomorrow