கனமழை எதிரொலி.. புதுச்சேரியில் முக்கிய அணைகள் திறப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 50.3  மி.மீ., (5 செ.மீ.) மழை பெய்துள்ளது.இதனால் புதுச்சேரியில் உள்ள சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் கடந்த 30-ந் தேதி தாக்கிய பெஞ்ஜல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், துணை மின்நிலையங்கள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. 

இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வருகிற 16-ந் தேதி வரை புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது.  இன்று 2-வது நாளாக புதுச்சேரி முழுவதும் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தர விட்டார்.

மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர புதுச்சேரி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகம் திறக்கப்படுவதன் காரணமாக வெள்ள அபாயம் ஏற்படுவதால்  புதுச்சேரியில் உள சங்கராபரணி மற்றும் தென் பெண்ணை ஆறு அருகில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்குமாறு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain Major dams opened in Puducherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->