கொடைக்கானலில் புரட்டிப்போட்ட பலத்த மழை!...மண்சரிவுவுடன் சாலைகளில் அடித்துச் செல்லப்பட்ட பாறைகள்!...பொதுமக்கனின் இயல்பு வாழ்க்கை முடக்கம்! - Seithipunal
Seithipunal


மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்த மரங்களையும், பசுமை போர்வை போர்த்திய மலைப்பகுதிகளையும் கொண்ட கொடைக்கானலுக்கு இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கொடைக்கானலில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மழை பெய்ய துவங்கிய நிலையில், பின்னர் அது  பலத்த மழையாக மாறி கொட்டித் தீர்த்தது.  சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால், நகரின் முக்கிய சாலைகள், வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது.

குறிப்பாக, பெருமாள்மலையை அடுத்த அடுக்கம் மலைக்கிராம பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டதுடன், பாறை குவியல்கள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு சாலைகளில் கிடந்தது.

பாறை குவியல்களால், அடுக்கம் – பெரியகுளம் சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அவை சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இருந்த போதிலும் மண் சரிவு காரணமாக அங்கு உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain overturned in kodaikanal rocks washed away on roads with landslides normal life of common man paralyzed


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->