மிக கனமழைக்கான எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழு.!  - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் நான்கு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக மாநில பேரிடர் மீட்பு படை தகவல் அளித்துள்ளது. 

அதன்படி திருநெல்வேலியில் 90 வீரர்கள் கொண்ட மூன்று குழுக்களும், கன்னியாகுமரியில் 90 வீரர்கள் கொண்ட மூன்று குழுக்களும், நீலகிரியில் மூன்று குழுக்களும், கோவையில் ஒரு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain warning state disaster response team dispatched 4 districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->