கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? - ஹென்றி திபேன் கண்டனம்..!!
Henri Dipen Says About Kallakurichi Hooch Case
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம், மாதவசேரி உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப் பட்ட 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.
இவர்களில் 63 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி டிஜிபி மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் இருவரும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் 6 பெண்களும் பலியாகியுள்ளதால், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் பேசுகையில், "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டுள்ள நிலையில் மனித உரிமை ஆணையமும், மகளிர் ஆணையமும் இதில் தலையிட்டு அரசியலாக்க கூடாது. இதற்கு தலைமைச் செயலர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது கடமை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Henri Dipen Says About Kallakurichi Hooch Case