காலாவதியான மருந்துகள் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் உபயோகத்தை தடுக்க பறக்கும் படை அமைத்த திடீர் சோதனை நடத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகத்து தொடர்பாக முத்துமாலை ராணி என்பவரின் ஓய்வூதிய பலனை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் காலாவதியான மருந்துகள் தடுப்பது குறித்தான அறிக்கையினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் மருந்து உற்பத்தி முதல் விநியோகம் செய்யப்படும் வரை பல்வேறு நடைமுறைகளை பின்பற்றப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தேவைக்கு அதிகமாக இருக்கும் மருந்துகளை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு மாற்றி அனுப்பி வைக்கப்படுவதாகவும், மருத்துவமனைக்கு ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் 104 வழங்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து மருத்துவமனைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளின் மீது விற்பனைக்கு அல்ல என அச்சிடப்படுவதால் தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதி மருந்துகளை திரும்ப பெற வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் மருந்துகள் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து பாராட்டுக்கள் தெரிவித்த நீதிபதி இதனை அமல்படுத்த வேண்டும் எனவும், காலாவதியான மருந்துகள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து திடீர் சோதனை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு சுகாதார கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அரசு மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்திட பயோமெட்ரிக் வருகை பதிவை செயல்படுத்தலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான கருத்துக்களை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வரும் 11ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High Court ordered TN government to take actionon expired medicines


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->