யானைகள் பராமரிப்பு - கோவில் நிர்வாகங்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலில் இருந்த தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கோவில் யானைகளை பாராமரிப்பது குறித்து, கோவில் நிர்வாகங்களுக்கு 39 அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதாவது:-

* யானைகளை உறுதியான மண் அல்லது புல் தரையில் நிறுத்தி வைக்கவும்.

* காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்கவும்.

* யானையின் எடை, வயதுக்கு ஏற்ப உணவுகளை உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்க வேண்டும்.

* யானையின் கால், நகக்கண், தந்தங்களில் தோக்கா மல்லி எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும்.

* யானைக்கு வெப்பம் அதிகரிக்கும்போது, சங்கிலியால் கட்டி தேவையான உணவு, தண்ணீர் அருகில் வைக்க வேண்டும். 

* மது அருந்தியவர்களை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

* கோயில் யானைகள் அருகே பக்தர்களை அனுமதிக்கக் கூடாது. 

* அருகே நின்று, செல்பி, புகைப்படம் எடுக்கவும் விடக் கூடாது.

* உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. 

* வாரத்திற்கு நான்கு முறையும், கோவை காலத்தில் தினமும் யானையை கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும்.

* யானைக்கு தினமும் 10 கி.மீ தூரத்திற்கு நடைபயிற்சி அளிக்க வேண்டும் என அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu Religious Charities department order to temples for elephants caring


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->