பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஹிப்பாப் ஆதி! பட்டம் பெற வந்தாரா?
Hip hop Adi Bharathiar University Convocation
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 38 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என். ரவி தலைமையேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்த விழாவில் 1,382 பேர் பி.எச்டி பட்டமும், 334 பேர் எம்.பில். பட்டமும் பெற்றனர். கலை பாடப்பிரிவில் 10,958 பேர், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் 16,907 பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் 36,856, கல்வியியல் பாடப்பிரிவுகளில் 846
உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் இணை வேந்தர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் இந்திய அரசின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர், பல்கலைக்கழக பதிவாளர் உளிபட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி மேலாண்மை பிரிவில் இசைத்தொழில் முனைவோர் பி.எச்.டி முடித்து பட்டம் பெற்றார்.
அப்போது அவர் பேசி இருப்பதாவது, ''இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சென்னையை மையமாக வைத்து மியூசிக்கல் அகாடமி திறக்க உள்ளேன்.
இதற்காகதான் நான் ஆராய்ச்சி படிப்பு படித்து பட்டம் பெற்றுள்ளேன். தற்போது உடற்கல்வி ஆசிரியராக 'பி.டி மாஸ்டர்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தின் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என்றார்.
English Summary
Hip hop Adi Bharathiar University Convocation